வன்முறை தொடர்பாக எழும் கேள்வி..!!  போலீசார் விசாரணையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே..!!

இலங்கையில் ஏற்பட்ட  பொருளாதார நெருக்கடிக்கு  மஹிந்த ராஜபக்சே காரணமாக இருந்த நிலையில் அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். இதற்காக இலங்கை மக்கள் பலரும் வன்முறையில் ஈடுபட்டு உயிரிழந்தனர்.

இந்த வன்முறை தொடர்பாக மஹிந்த ராஜபக்சே விடம் இலங்கை காவல் துறையினர் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர். மகிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இலங்கை மக்கள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் தீவிரமான நிலையில் பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார்.

அதைத்தொடர்ந்து போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் கொடூரமான தாக்குதல்களை நடத்தினர். இதனால் இலங்கை முழுவதும் கலவரம் ஏற்பட்டது. இதனால் மகிந்த ராஜபக்சேவின் இல்லம், பெற்றோர் கல்லறை மற்றும் ராஜபக்சே ஆதர்வாளர்கள் வீடு என 100க்கும் மேற்பட்ட சொத்துகள் சூறையாடப்பட்டது.

இலங்கை வன்முறை: போலீசாரிடம் வாக்குமூலம் அளிக்க தயார்- முன்னாள் பிரதமர்  மகிந்த ராஜபக்சே தகவல் || tamil news Sri Lankan violence Ready to confess to  police Former PM Mahinda ...

இந்த மோதலில் ராஜபக்சே ஆதரவாளர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 1,500க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் ராஜபக்ச குடும்பத்தினர் தப்பி ஓடி மறைந்து வாழ்ந்து வருகின்றனர். ராஜபக்சேவும் பாதுகாப்புடன் இருந்து வருகிறார்.

இதனைத்தொடர்ந்து இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். அவரது தலைமையில் அனைத்து கட்சி அமைச்சரவை பதவியேற்றது. இந்த நிலையில் மகிந்த ராஜபக்சேவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்த ரணில் விக்ரமசிங்கே உத்தரவிட்டார். அதன்படி, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவிடம் சிஐடி போலீசார் இன்று 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *