ஆப்கானிஸ்தானில் விமான சேவை..!! முதலீடுகளை அதிகரிக்க தாலிபான் அரசு முடிவு..!!
ஆப்கானிஸ்தானில் விமான சேவையை மீண்டும் தொடங்க திட்டமிட்டு உள்ளதாக தாலிபான் அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரக நிறுவனம் ஒன்றுடன் தாலிபான் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஆப்கனிஸ்தானின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற தாலிபான்கள் அங்கு விமான சேவையை நிறுத்தினர். இந்நிலையில் துருக்கி மற்றும் கத்தார் நிறுவனங்களுடன் டிசம்பரில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து தலைநகர் காபூலில் மட்டும் விமான சேவை தொடங்கப்பட்டது.
மேலும் மற்ற முக்கிய நகரங்களில் விமான சேவையை தொடங்குவது குறித்து துருக்கி, கத்தார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த விமான சேவை நிறுவனங்களுடன் ஆப்கானிஸ்தான் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் விமான சேவையை அளிக்க GAAC நிறுவனம் முன்வந்ததை அடுத்து அந்நிறுவனத்துடன் ஆப்கானிஸ்தான் துணை பிரதமர் முல்லா அப்துல் கனி பராதர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதை தொடர்ந்து பேசிய முல்லா அப்துல் கனி பராதர் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு வலுவாக இருப்பதாகவும் இங்கு முதலீடுகளை மேற்கொள்ள இஸ்லாமிய நாடுகள் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்று தலிபான் அரசு தெரிவித்த நிலையில் அந்த உத்தரவுக்கு ஆண் பத்திரிகையாளர்கள் நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது