BREAKING: நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தடை விதிக்க முடியாது: உயர்நீதி மன்றம் அதிரடி!





செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள கடற்சார் படிப்புகளுக்கான நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் அருகே நீர்நிலை பகுதிகள் உள்ளன. அதில் பாம்பு, கொசு,பூச்சிகளை அதிகரிப்பதை தடுக்கவும், அதில் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை நீக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதுதொடர்பாக பல்கலைக்கழகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் எந்த ஒரு நடவடிக்கையையும் பல்கலைக் கழகம் சார்பாக எடுக்கப்படாத சூழலில் இதனை அகற்றுவதற்கான நடவடிக்கையை திருப்பூர் ஒன்றியம் மூலமாக மேற்கொள்ளப்பட்டது.

இந்த நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்கலைகழகம் வழக்கு தொடர்ந்தது. குறிப்பாக பல்கலைக்கழகத்தின் மூத்த தலைவர் கரிகாலன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கின் அமர்வு இன்று விசாரணைக்கு வந்தது இதில் தமிழக அரசு சார்பாக அப்பகுதியில் எவ்வித ஆக்கிரமிப்பு இல்லை என தாக்கல் செய்யப்படாத நிலையில் இந்த நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெளிவாக தெரிவித்துள்ளது. எனவே நீர்நிலை பகுதிகளை அகற்றுவதற்கு எந்தவித தடைகளையும் விதிக்க முடியாது என்றும் இதற்காக எந்தவித உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி வழக்கை ஜூன் மாதத்திற்கு தள்ளி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *