Breaking: விருதுநகர் கூட்டு பாலியல் வழக்கில் 680 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!

விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 680 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில் 22 வயது இளம்பெண் ஒருவர் பாலியல்வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவர் அதிர்ச்சியை ஏற்படுத்துயது. இந்த வழக்கில் பால் பண்ணை உரிமையாளர் ஹரிஹரன், ஜூனத் அகமது, மாடசாமி, பிரவீன் குண்டர் சட்டத்தில் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

அதே போல் சிறுவன் ஒருவன் கைதுச்செய்யப்பட்ட நிலையில் ஜாமினில் வெளியே வந்துள்ளார். இருப்பினும் 7 வயது சிறுவனைத் தவிர மற்ற மூன்று பெயரையும் அப்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கின் விசாரணை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய ஆலோசித்து வருவதாக அண்மையில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேர் தொடர்பாக 440 பக்க குற்றப்பத்திரிகை, ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கூட்டு பாலியல் வழக்கு தொடர்பாக பள்ளி மாணவர்கள் உடபட 4 பேர் தொடர்பாக 240 பக்க குற்றப்பத்திரிகை, விருதுநகர் இளஞ்சிறார் நீதிக்குழுமத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.