மீண்டும் உதவிக்கரம் நீட்டிய அமெரிக்கா..!! நன்றி தெரிவித்த உக்ரைன்..!! 

ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக  உக்ரைன் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் பல நாடுகள் உக்கிரன் நாட்டிற்கு உதவி கரம் நீட்டி வருகிறது. இதில் அமெரிக்க மற்ற நாடுகளை விட அதிக அளவு பொருள் உதவியும் ஆயுத உதவியும் வணங்கி வருகிறது.

இந்த நிலையில் கடும் பாதிப்பை சந்தித்து வரும் உக்ரைனுக்கு மீண்டும் ரூ.3 லட்சம் கோடி நிதியுதவி வழங்க அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ரஷ்யாவுக்கு உக்ரைன் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இது தவிர ரஷ்யாவுக்கு எதிராக தொடர்ந்து போரிட உக்ரைனில் ராணுவ உதவி வழங்கப்படும் என நேட்டோ அமைப்பு அறிவித்ததுடன் ரஷ்யாவுக்கு எதிராக போரில் உக்ரைன் வெற்றி பெற முடியும் என நேட்டோ அமைப்பு தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் பல பகுதிகளை கைப்பற்றி உள்ள நிலையில் ரஷியப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் மரியுபோல் நகரில் உள்ள இரும்பாலையில் தாக்குதலில் காயமடைந்தவர்கள் உள்பட உக்ரைன் ராணுவ வீரர்கள் பலர் சரணடைந்துள்ளதாக நேற்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ரஷியாவின் பயங்கர தாக்குதலுக்கு கடும் சேதங்களை சந்தித்து வரும் உக்ரைனுக்கு நிதியுதவியாக 40 பில்லியன் டாலர்களை அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. 

அமெரிக்காவின் இந்த உதவி உக்கிரன் க்கு மேலும்  பக்க பலமாக இருக்கும் என  நேட்டோ அமைப்பு தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்  தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *