இலங்கையில் மேலும் 9 புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்..

இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலையில்  பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து  மஹிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் புதிய பிரதமராக ரணில் விக்கிரம சிங்கே பொறுப்பேற்று நிலைமையை சரி செய்ய பல நாடுகளிடம் நிதி உதவி கேட்டு வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 14 ஆம் தேதி தினேஷ் குணவர்தன, ஜீ.எல்.பீரிஸ், காஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க ஆகியோர் இடைக்கால அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

இந்த நிலையில் கூடுதலாக 9 புதிய அமைச்சர்களுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவிப்பிரமாணம் செய்துள்ளார். அதன்படி, துறைமுகம்,  கப்பல்கள், விமான சேவை துறை அமைச்சராக நிமல் சிறிபால டிசில்வா பதவியேற்றார்.

கல்வித்துறை அமைச்சராக சுசில் பிரேமஜயந்த, சுகாதாரத்துறை அமைச்சராக கெஹெலிய ரம்புக்வெல்லவும் பதவியேற்றுக்கொண்டனர். மேலும், விஜேதாச ராஜபக்ச நீதித்துறை அமைச்சராகவும், ஹரின் பெர்னாண்டோ சுற்றுலாத்துறை அமைச்சராகவும், ரமேஷ் பத்திரன, மனுஷ நாணயக்கார, நளின் பெர்ணான்டோ, டிரான் அலஸ் ஆகியோர் இலங்கையின் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்நிலையில் இலங்கை அரசின் மத்திய வங்கியின் கவர்னர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று  ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் இலங்கையில் இந்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி வீதம் மிகவும் மந்தமான நிலையில் காணப்படும்.

தற்போது 30 சதவீதமாக உள்ள பணவீக்கம் வருகிற சில மாதங்களில் 40 சதவீதமாக அதிகரிக்கும் என கூறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *