அதிகரிக்கும் “கொரோனா பரவல்” வேதனை தெரிவித்த உலக சுகாதார இயக்குநர் டெட்ரோஸ் அதானம்..

உலக அளவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதானம் கவலை தெரிவித்துள்ளார். சமீபத்தில் வட கொரியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அங்கு பலியானோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

வட கொரியாவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் அதிகமாக இருப்பதால் இது இன்னும் அதிகரித்து உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது என டெட்ரோஸ் அதானம்  கவலை தெரிவித்தார்.

அதேபோல் சீனாவில் கொரோனா அதிகரித்து வரும் வேளையில்    நிறைய கெடுபிடிகளை கடைபிடிப்பதாக சீனா மீது  டெட்ரோஸ் அதானம்  கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் பேசுகையில் உலக சுகாதார அமைப்பின் 4ல் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. சோதனைகளும், மரபணு பகுப்பாய்வு சோதனைகளும் கூட உலக அளவில் குறைந்துள்ளது என கூறியுள்ளார். 

இதன் காரணமாக  கொரோனா வைரஸ் இப்போது எந்தப் பகுதியில் அதிகரித்து வருகிறது, அது எவ்வாறு உருமாறி வருகிறது என்பதை அறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என கூறினார்.  தடுப்பூசி செலுத்தாத காரணத்தால் மக்களுக்கு தீவிர நோய் பாதிப்புகள் ஏற்படுமோ எனத் தோன்றுகிறது என்றார்.

வட கொரியா நாட்டில் கொரோனா பரவல் மரணங்கள் குறித்த தகவலைப் பகிருமாறு உலக சுகாதார அமைப்பு கோரியுள்ளது. இந்நிலையில் பெருந்தொற்று ஆரம்பத்தில் கடைபிடிக்க கடுமையான ஊரடங்குகள் இப்போது தேவையில்லை என்று டெட்ரோஸ் அதானம் கூறினார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் நியூயார்க் நகரில் கடந்த சில வாரங்களாக கோவிட் தொற்று அதிகரித்துள்ளது என கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *