பாகிஸ்தானில் இஸ்லாமிய தேச கொரசான் பிரிவு நடத்திய துப்பாக்கி சூடு.. இருவர் பலி..!

பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் சீக்கிய சமுதாயத்தைச் சேர்ந்த 2 பேர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொல்லப்பட்ட இருவரும் அப்பகுதியில் வசிக்கும் சல்ஜீத் சிங் மற்றும் ரஞ்ஜீத் சிங் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

போலீசார் கொலை நடந்த பகுதியில் மேலும் தீவிர சோதனை மேற்கொண்டு வரும் வேளையில் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இஸ்லாமிய தேச கொரசான் பிரிவு பொறுப்பேற்ற முன்வந்துள்ளது. இந்தப் பிரிவு ஐஎஸ் அமைப்பின் ஆப்கானிஸ்தான் அமைப்பை சார்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மாகாண முதல்வர் மஹ்மூத் கான் உட்பட பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்தார். சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பேர் கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு  இந்தியா கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது ஒரு அதிர்ச்சிகரமான மற்றும் வருந்தத்தக்க சம்பவம் எனத் தெரிவித்துள்ளது.

பெஷாவர் நகரில் சிறுபான்மை சமூகத்தினர் உள்ள சீக்கியர்கள் இந்துக்கள் அது சார்ந்த அமைப்புகள் மத வழிபாட்டு தலங்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *