இலங்கையில் நாளை அரசியலமைப்பு திருத்தம் நடைபெறும் – ரணில் விக்கிரமசிங்கே

இலங்கையில் நிதி நெருக்கடி காரணமாக பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு இலங்கை கடந்த ஒரு மாதமாக கலவர பூமியாக மாறியுள்ளது. இதற்கு காரணமாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ பதிவு விலகிய நிலையில் நாட்டின் புதிய பிரதமராக ஆறாவது முறையாக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார்.  ரணில் விக்ரமசிங்கே  பொறுப்பேற்ற உடன் நிதி நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே கடந்த வாரம்   பொறுப்பேற்றுள்ள நிலையில் நாட்டில் 21 வது அரசியல் திருத்தம் கொண்டு வர நாளை பேச்சுவார்த்தை தொடங்கப்பட இருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ஆசிய அபிவிருத்தி மற்றும் உலக வங்கியின் உயரதிகாரிகளிடம் பேசியுள்ளதாகவும் நிதி நெருக்கடியில் சிக்கிய இலங்கைக்கு தேவைப்படும் உதவிகளை அளிப்பதாக அவர்கள் கூறியதாகவும் தெரிவித்திருக்கிறார்.

மேலும் நாளை இலங்கையின் 21-வது அரசியல் திருத்தம் கொண்டு வர பேச்சுவார்த்தை தொடங்கப்பட இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இது மட்டுமல்லாமல் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து அறிக்கையையும் நாளை வெளியிட வாய்ப்பிருக்கிறது தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் மே 18ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு தினமாகவும், இனப்படுகொலை நினைவு தினமாகவும் அனுசரித்து வரும் சூழலில் முன்னாள் விடுதலைப் புலிகள் இலங்கை நாட்டில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும், விடுதலைப் புலிகளின் முக்கியமான தலைவர்கள் படுகொலைக்கு பழி வாங்க சதித்திட்டம் தீட்டி இருப்பதாகவும்  தகவல் வெளியாகி இலங்கை ராணுவத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *