அமெரிக்காவில் நடந்த விபரீத விபத்து..!! கார் மீது விமானம் மோதி ஒருவர் உயிரிழப்பு..!!

அமெரிக்காவில் பாலத்தின் மீது தரையிறங்கிய விமானம் எதிர் திசையில் வந்த காருடன் மோதிய கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவின் ஹாலிவுட்-ஃபோர்ட் லாடர்டேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மூன்று பயணிகளுடன் வந்து கொண்டிருந்த இலகு ரக விமானம் எஞ்சின் கோளாறு காரணமாக  அவசர அவசரமாக மியாமி நகரில் உள்ள ஒரு பாலத்தின் மீது தரை இறங்க நேரிட்டது.

இந்த நிலையில் நேர் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த கார் மீது விமானம் மோதியதில் பயங்கர தீப்பிடித்து விமானம் எரியத் தொடங்கியது. இந்த தீ விபத்தில் விமானத்தில் இருந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்.

மேலும் காரில் இருந்த 5 பேர் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.  இந்த விபத்தை அறிந்து அங்கு வந்து மியாமி தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம்  போராடி விமானத்தில் உள்ள தீயை முற்றிலும் அணைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து சம்பந்தமான வீடியோ  இணையதளத்தில் வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *