கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் தவிர்க்கும்  வடகொரியா..!! 

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று பரவிய நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக எங்கள் நாட்டில் கொரோனா தொற்று முற்றிலும் இல்லை என வந்த வடகொரியா தெரிவித்து வந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் எங்கள் நாட்டில் முதன் முறையாக  ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது  என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார். 

இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டது. வடகொரியா மக்கள் இதுவரை கொரோனா தடுப்பூசி எடுத்து கொள்ளாத நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து மர்ம காய்ச்சல் பரவி வருவதாக வடகொரிய அரசு அறிவித்தது. 

இந்த நிலையில்  நாட்டில் முதன் முறையாக ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு நிலையில் கடந்த 3 நாட்களில் மட்டும் வடகொரியாவில் எட்டு லட்சத்திற்கும் அதிகமான பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதில் 42 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என வடகொரியா அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய அதிபர் கிம் ஜாங் உன் இவ்வளவு வீரியம் மிக்க நோய் தொற்று பரவுவது இதுவே முதல் முறை என குறிப்பிட்டார். மோசமான சுகாதார கட்டமைப்பை கொண்டுள்ள வடகொரியாவில் அதிக கொரோனா பரிசோதனை திறன் இன்றி எவ்வாறு தொற்று கட்டுக்குள் கொண்டு வர முடியும் என மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையிலும் கிம் மற்றொரு அணுகுண்டு சோதனை நடத்த தயாராகி வருவதாக அமெரிக்காவும் தென் கொரியாவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *