ரஷ்ய படைக்கு செக் வைத்த உக்ரைன்..!! உக்ரைனில் ரஷ்யா அமைத்த தற்காலிக பாலம் தகர்ப்பு..!!

உக்ரைன்- ரஷ்யா போர் இரண்டு மாதங்களாக நடைபெற்று வரும் சூழ்நிலையில் இன்று வரை அமைதிக்கான பேச்சுவார்த்தை எட்டவில்லை. நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு  எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, அந்நாட்டின் மீது தொடர்ந்து ராணுவ நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த போரில் உக்கிரன் கட்டிடங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் சுகாதார மையங்களை ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி அழித்துள்ளது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யா மீது  குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த நிலையில் உக்ரைன் நாட்டை தாக்க  ரஷ்யா அமைத்த தற்காலிக பாலத்தை ஏவுகணைகள் மூலம் தாக்கியுள்ளதாக  உக்ரைன் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். டான்பாஸ் மாகாணத்தில் ஓடும் சிவர்ஸ்கி ஆற்றை கடக்க முயன்ற ரஷ்ய படைகள் மீது உக்ரைன் ராணுவத்தினர் ஏவுகணைகள் கொண்டு  தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் ஆற்றை கடக்க ரஷ்யா அமைத்திருந்த தற்காலிக பாலம் தகர்க்கப்பட்டது.

மேலும் இந்த தாக்குதலில் ரஷ்ய படையின் பெரும்பாலான வாகனங்கள் அழைக்கப்பட்டதாகவும், ஏராளமான வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் உக்ரைனின் ராணுவம் தெரிவித்துள்ளது. கிழக்கு உக்ரைனில் நுழைவதற்காக சிவர்ஸ்கி ஆற்றை 3 முறை ரஷ்ய ராணுவத்தினர் கடக்க முயன்றதாகவும் அது தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் உக்ரைனின் ராணுவம் தெரிவித்துள்ளது.

உக்கிரைன் ரஷ்யா போர் காரணமாக உக்ரைன் மக்கள் பிரேசிலில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில் அவர்களுக்கு  உணவு வழங்கப்படுவதாக பிரேசிலில் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த போரின் எதிரொலியாக இதுவரை உக்ரைன் நாட்டை விட்டு 60 லட்சம் மக்கள்  வெளியேறியுள்ளதாக தகவல் வெளியானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *