யாரா இருந்தாலும் நடவடிக்கை பாயும்… கி.வீரமணி பதிலடி கொடுத்த சேகர்பாபு!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சித்திபுத்தி விநாயகர் கோயில் மற்றும் பெரிய பாளையத்து அம்மன் கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் எழிலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, பட்டின பிரவேசம் நிகழ்வுக்கு பயத்தின் அடிப்படையில் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நிகழ்வு என்பதால் ஆதினங்கள் கோரிக்கைக்கு ஏற்ப அனுமதி வழங்கப்பட்டது என விளக்கமளித்தார். எதிர்காலங்களில் பட்டின பிரவேசம் போன்ற நிகழ்வுகளுக்கு சுழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என கூறினார்.

தருமபுரம் பட்டின பிரவேசம் நிகழ்வுக்கு அனுமதி அளித்தன் மூலம் எதிர்காலத்தில் இந்து அமைப்புகள் அரசு எதிராக செயல்படுவதற்கு வாய்ப்புள்ளது என திராவிடர் கழக கி.வீரமணி தெரிவித்துள்ள கருத்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய பதிலளித்த அவர், கீ.விரமணி அவரது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். ஆத்திகர், நாத்திகர் என அனைவருக்குமான அரசாக உள்ளது என கூறினார்.

ஆர்.ஏ. புரம் பகுதியில் தனி நபர் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து உள்ளாரா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்து உள்ளோம் யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *