இனி இவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை… செவிலியர் தினத்தில் அமைச்சர் சொன்ன இனிப்பான செய்தி!

மருத்துவத்துறையில் புதிய நியமனங்களில் பேரிடர் காலங்களில் பணியாற்றிவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

உலக செவிலியர் தினம் மற்றும் அண்மையில் நடந்த தீ விபத்தின் போது சிறப்பாக செயல்பட்டு நோயாளிகளின் உயிரை காப்பாற்றிய ஊழியர்களுக்கு பாராட்டு விழா ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்றது.

முன்னதாக செல்வியர்கள் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.

பின்னர் அண்மையில் நடந்த தீ விபத்தின் போது சிறப்பாக செயல்பட்டு நோயாளிகளின் உயிரை காப்பாற்றிய செவிலியர்கள், தீயணைப்பு துறையினர் உள்ளிட்ட ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “உறவு முறை சார்ந்த பெயரோடு இருப்பது செலிவியர் பணி மட்டுமே.
இத்துறையில், பேரிடரை விட பணிமாறுதல் தான் பெரிய சவாலாக இருந்தது. வசதி படைத்தவர்கள் மட்டுமே விருப்பப்படும் இடத்திற்கு செல்ல முடியும் என்ற நிலை இருந்தது. இதை மாற்ற வெளிப்படையான கவுன்சிலிங்  நடத்தப்பட்டது. இந்த ஓராண்டில், மருத்துவர், செவிலியர், மருத்துவ களப்பணியாளர்கள்
13000 பேருக்கு விருப்பிய இடத்திற்கு எந்த செலவும் இல்லாமல் பணிமாறுதல் பெற்றுள்ளனர்.

வேலை வாய்ப்பில் ஒப்பந்தம், அவுட் சோர்சிங் இருக்க கூடாது என நினைக்கிறோம். மினி கிளினிக்கில் பணியாற்ற ஓராண்டு மட்டுமே வேலை என 1820 மருத்துவர்களை கடந்த ஆடையில் வேலையில் சேர்த்துள்ளனர். அவர்கள் தற்போது வருத்தத்தில் உள்ளனர். அவர்கள் பேரிடர் காலங்களில் பணியாற்றி உள்ளனர். தற்போது 7296 பேரை மக்களை தேடி மருத்துவம் திடத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.அதேபோல், நகர்புறங்களில் 708 புதிய மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளன. அதில், பேரிடர்களில் காலங்களில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசு மருத்துவமனைகள் மிகப்பெரிய சாதனைகளை செய்து வருகிறது. மிக மோசமான நிலையில், காப்பாற்ற முடியாத நிலையில் வருபவர்களை கூட அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் காப்பாற்றி வருகிறார்கள். அரசு மருத்துவமனையில் சின்ன தவறு கூட நடக்காமல் மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம்,” என்றார்

தொடர்ந்து மக்கள் நல்வாழ்த்துத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், “தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நாளொன்றுக்கு 6 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். 70 ஆயிரம் பேர் உள்நோயாளிகளாக உள்ளனர். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மட்டும் நாளொன்றுக்கு 150-200 அறுவை சிகிச்சைகள் நடக்கிறது. நாட்டிலேயே, மருத்துவமனையில் அதிக படுக்கை வசதிகள் கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது,” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *