‘கொடுமைப்படுத்துறங்க’ 100-க்கு வந்த அவசர போன்… நடிகை மும்தாஜ் வீட்டிற்கு விரைந்த போலீஸ்!

பிரபல திரைப்பட நடிகை மும்தாஜ் வீட்டில் வேலை பார்த்த பெண் காவல்துறை அவசர கட்டுப்பாட்டுக்கு புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ் திரையுலகில் மோனிஷா என் மோனலிசா என்ற திரைப்படம் மூலம் நடிகை மும்தாஜ் அறிமுகமானார் அதன் பின்பு பல படங்களில் நடித்திருக்கிறார் குஷி, ஸ்டார்,ரோஜாக்கூட்டம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அண்ணாநகர் எச் பிளாக் 2வது தெருவில் நடிகை மும்தாஜ் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை மும்தாஜ் வீட்டில் கடந்த 6 வருடமாக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த முக்தீன் மற்றும் அவரது சகோதரி மும்தாஜின் வீட்டில் வீட்டு வேலைகளை செய்து வருகின்றன. இந்நிலையில் இன்று காலை காவல்துறையின்‌ அவரச உதவி எண் 100க்கு முக்தீன் தொலைபேசி மூலம் அழைத்து புகார் அளித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து அண்ணா நகர் மகளிர் காவல் நிலைய போலீசார் உடனடியாக, நடிகை மும்தாஜின் வீட்டிற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி உள்ளனர். அதில் தான் அந்த வீட்டில் இருக்க முடியாது எனவும் தனக்கு கொடுமைகள் நடப்பதாகவும் கூறியதாக தெரிகிறது இதனைத் தொடர்ந்து அண்ணா நகர் மகளிர் காவல் நிலைய போலீசார் அரசு காப்பகத்தில் அந்த பெண்ணை சேர்த்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *