இலங்கையில்  வெடிக்கும் கலவரம்..!போராட்டக்காரர்கள் மீது போலீஸ் மீண்டும் துப்பாக்கிச்சூடு..!!

இலங்கையில் வரலாறு காணாத நிதி நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்த தொடங்கினர். இந்நிலையில் அதற்கு காரணமான ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று மக்கள் கோஷங்களை எழுப்பினர்.

இதை தடுக்கும் விதமாக இலங்கையில் நாடு தழுவிய ஊரடங்கு நேற்று அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் இலங்கை முழுவதும் வன்முறை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக மஹிந்த ராஜபக்ஷ நேற்று அறிவித்தார். இந்நிலையில் கோத்தபய ராஜபக்சே பதவி விலகினால் இலங்கையில் ஆட்சி அமைக்க நாங்க தயார் என்று பிரதான எதிர்க்கட்சியான எஸ்.ஜே.பி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இலங்கையில் இரண்டாவது நாளாக நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெரும் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொழும்பில் போலீஸ் டி.ஐ.ஜி. தேசபந்து தாக்கப்பட்டதை அடுத்து போராட்டக்காரர்கள் மீது போலீஸ் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்த துப்பாக்கிச் சூட்டால் இலங்கையில் மேலும் பதற்றம் அதிகரித்தது வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *