பிரதமர் மகிந்த ராஜபக்சே நாட்டை விட்டு தப்பிச் செல்ல திட்டம்..!!!
இலங்கையில் நேற்றைய தினம் மக்கள் போராட்டமானது கலவரத்தின் உச்ச நிலைக்கு சென்றுள்ளது. இலங்கை முழுவதும் மக்கள் போராட்டம் மிகப்பெரிய கலவரமாக மாறிய நிலையில் இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே வீட்டை தீ வைத்து கொளுத்தியது மேலும் பரபரப்பை உண்டாகியுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு என இலங்கை பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதற்கு காரணமான இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் பதவி விலக வேண்டும் என மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்சே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்யப்போவதாக நேற்று தகவல் வெளியானது. இந்நிலையில் இலங்கையில் குரு காலாவில் அமைந்துள்ள பிரதமர் மகிந்தா ராஜபக்சே வீட்டை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு அடித்து நொறுக்கி தீ வைத்து கொளுத்தி உள்ளனர்.
தற்போது இந்த இடமே கலவர பூமியாக மாறியுள்ளது. நேற்று நடந்த இந்த வன்முறை சம்பவங்கள் இலங்கையில் பெரும் பதற்றத்தை உருவாகியுள்ளது.இந்த நிலையில் மஹிந்த ராஜபக்ச பலத்த ராணுவ பாதுகாப்புடன் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறி உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
நைஜீரியா நாட்டில் இருந்து சிறப்பு விமானம் ஒன்று இலங்கையில் உள்ள கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு தரையிறங்கியுள்ளது. இந்த விமானம் மூலம் ராஜபக்சே வெளிநாடு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.