இந்தியா எல்லைப் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா..

அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் பாஜக கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அசாமில் ஹிமந்த பிஸ்வா தலைமையிலான அரசு அமைந்து இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில் அமித்ஷா அசாம் சென்றுள்ளார்.

அசாமில் இரண்டு நாள் பயணமாக சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தியா – வங்கதேச எல்லை பகுதிக்கு சென்று அங்கு நிலவும் சூழல் குறித்து அங்கிருக்கும் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதன்பின் அங்கிருந்த மக்களை சந்தித்த அமித்ஷா எல்லைப் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதியாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

அப்போது அமித்ஷா கூறியதாவது எல்லைப் பகுதிகளில் போதுமான வளர்ச்சி திட்டங்கள் முன்பு அமல்படுத்தப்படவில்லை. அது மக்கள் புலம்பெயர வழிவகுத்தது. இதன் காரணமாகத்தான் அப்பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதியாக இருக்கிறது. அதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

எல்லைப் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்த எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்கு நவீன தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் என தெரிவித்தார். அதன்பின் கவுகாத்தியில் நடக்கும் விழாவில் பங்கேற்க உள்ள அமித்ஷா இன்று மாலை டெல்லிக்கு திரும்புகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *