ஆப்கானிஸ்தானில் நடப்பது வேதனை அளிக்கிறது..!! ஐ.நா பொதுச்செயலாளர் கண்டனம்..!!
ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு விதிக்கும் சட்டங்கள் எல்லாம் சமீபத்தில் பலருக்கும் அதிர்ச்சியை அளித்து வருகிறது. ஆண்கள், பெண்கள் என எந்தவித பாகுபாடுமின்றி தாலிபான் அரசு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. ஏற்கனவே ஆண்கள் தாடி வெட்ட கூடாது என தாலிபான் அரசு அறிவித்தது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
அந்த வகையில் நாட்டின் கேளிக்கை நிகழ்ச்சிகள், திரையரங்குகள், மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் முற்றிலும் தடை செய்துள்ளது.மேலும் பெண்களுக்கு வேலை வாய்ப்பு அனைத்தும் மறுக்கப்பட்ட நிலையில் மேலும் பெண்கள் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டுவதற்கு உரிமம் வழங்க கூடாது என்று தாலிபான் அரசு அறிவித்துள்ளது.
இதனால் ஆப்கானிஸ்தானில் பெண்கள் சுதந்திரம் முற்றிலும் மறுக்கப்பட்டு கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து தற்போது பொது இடங்களில் பெண்கள் பர்தா கட்டாயம் அணிய வேண்டும் என தாலிபான் அரசு அறிவித்துள்ளது. பெண்களுக்கு எதிரான இந்த கட்டுப்பாடுகளுக்கு பல உலக தலைவர்கள் உட்பட மனித உரிமை அமைப்புகளிடம் இருந்து கண்டனம் தெரிவித்து வருகிறது.
இதற்கு ஐ நா பொதுச்செயலாளர் பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் கவலை அளிப்பதாகவும், சர்வதேச மனித உரிமை சட்டங்களை மதித்து செயல்படுமாறு தாலிபான் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியை கைப்பற்றிய பிறகு தன்னுடைய கொள்கையை பின்பற்றி கடுமையான ஆட்சி செய்து வருவது வேதனை அளிக்கிறது என கண்டனம் தெரிவித்துள்ளார்.