சிரியா நாட்டிற்கு திரும்பும் துருக்கியில் உள்ள சிரியா அகதிகள்..!!

சிரியா நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஐஎஸ் தீவிரவாதிகள் எழுச்சி மற்றும் சிரியா அரசாங்கத்தை எதிர்த்து அவர்களின் ஆதிக்கம் அதிகமானதால் சிரியா நாட்டில் உள்நாட்டு போர் ஏற்பட்டது. இந்த போரின் விளைவாக சிரியா நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பலியாக நேரிட்டது.

இந்நிலையில் அந்நாட்டை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் அந்த நாட்டை விட்டு வெளியேறி பக்கத்து நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர். அதன் அண்டை நாடான  துருக்கியில் சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமான சிரியா நாட்டைச் சேர்ந்த மக்கள் அகதிகள் அங்கு வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் துருக்கி நாட்டின் கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்கள், போன்றவற்றை சிரியா நாட்டைச் சேர்ந்த மக்களால் அழிக்கப்பட்டு வருகிறது என அந்நாட்டின் எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தனர். இது தவிர துருக்கி, சிரிய மக்களிடையே வெறுப்புணர்வு மேலோங்கி வளர்ந்து வருகிறது. இரு நாட்டு மக்களிடையே தொடர்ந்து தாக்கும் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

இதை தவிர்க்க துருக்கி நாட்டில் வசிக்கும் சிரிய அகதிகளை, அவர்கள் நாட்டிற்கே திருப்பி அனுப்பி வைப்பதாக அதிபர் எர்டோகன் அறிவித்திருக்கிறார். இதுவரை  5 லட்சம் மக்கள் சிரியா மக்கள்  நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் மேலும் 10 லட்சம் அகதிகளை விரைவாக சிரியாவிற்கு அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர்  தெரிவித்தார். இதன் மூலம்  துருக்கி நாடு பழைய படி அமைதி நிலைக்கு திரும்பும் என அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *