டெல்லியில் துப்பாக்கிச்சூடு..!! பதறி ஓடிய பொதுமக்கள்..!!

அமெரிக்கா போன்ற சில நாடுகளில் பொது இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூடு கலாச்சாரம் தற்போது இந்தியாவிலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. டெல்லி போன்ற பெரு நகரத்தில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

டெல்லியில் உள்ள முக்கிய சாலையான சுபாஷ் நகர் சாலையில் வாகன நெருக்கடியில் திடீரென அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் ஒரு குறிப்பிட்ட வாகனத்தை குறி வைத்து பல தொடர்ச்சியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட இந்த  துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் அங்கு பெரிய பரபரப்பு ஏற்பட்டது. வாகன போக்குவரத்து மிகுந்த சாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

இந்த நிலையில் பொதுமக்கள் என்ன நடக்கிறது என புரியாமல், அதிர்ச்சியில் அங்கும் இங்கும் பதறி அடித்து ஓடினர். பாதுகாப்பான இடங்களுக்கு பொதுமக்கள் ஓடிச் சென்றனர். அதன்பின் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்கள் தப்பிச் சென்று ஓடுவது தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.இந்தத் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கேஷோபூர் மண்டியின் முன்னாள் தலைவர் அஜய் சௌத்ரி மற்றும் அவரது சகோதரர் ஜஸ்ஸா சவுத்ரி உள்ளிட்ட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சியில் இருந்து துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் யார் என்பதை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *