பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற வாய்ப்பு இல்லை..!! பீகார் முதல்வர் நிதிஷ்குமார்..!

பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பீகாரில் 300 கிலோ மீட்டர் நடைபயணம் சென்று மக்களை சந்திக்க இருப்பதாக அறிவித்து உள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அவரது கருத்து முக்கியம் அல்ல என தெரிவித்து உள்ளார். திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஜெகன்மோகன் ரெட்டி உட்பட பலர் வெற்றிக்கு துணை புரிந்தவர் தேர்தல் திட்ட வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர்.

இவர் 2024 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைப்பது தொடர்பாக காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இதைத் தொடர்ந்து அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் கிஷோர் வரும் அக்டோபர் இரண்டு முதல் பீகார் மாநிலத்தில் மேற்கு சம்பாரண் காந்தி ஆசிரமத்தில் தொடங்கி கிட்டத்தட்ட பீகாரில் 300 கிலோ மீட்டர் பாத யாத்திரை மேற்கொண்டு  முடிந்தவரை மக்கள் அனைவரையும் சந்திக்க உள்ளேன்.

பீகாரில் இனி வருங்காலத்தில் தேர்தல் இல்லை என்பதால், அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பான திட்டம் எதுவும் இப்போதைக்கு இல்லை. நான் பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பிக்க விரும்புகிறேன். அடுத்த மூன்று, நான்கு ஆண்டுகளில் பொது நல்லாட்சி என்ற திட்டத்துடன் மக்களை சென்றடைய விரும்புகிறேன் எனத் தெரிவித்தார். அவரது இந்த திடீர் அறிவிப்பு அவர் மாநிலத்தில் கட்சி தொடங்கி ஆட்சியை கைப்பற்றுவதற்கான முயற்சி என விமர்சிக்கப்பட்டது.

இந்த நிலையில் பிரசாந்த் கிஷோர் குறித்து கருத்து தெரிவித்த ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவரும், மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார், பீகாரில் நாங்கள் நல்லது செய்தோமா இல்லையா என்பது உங்களுக்குத் தெரியும். ஒருவரின் கருத்து முக்கிய மில்லை. உண்மை தான் முக்கியம். எங்களது பணி குறித்து மக்களுக்குத் தெரியும். பீகார் மாநிலத்தில் என்னென்ன நலத்திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து அனைவருக்கும் தெரியும்.

பீகார் வளர்ச்சிப் பணிகள் குறித்து உங்களுக்குத் தெரியும் என்பதால், நீங்களே பதில் சொல்லலாம். உண்மை நிலவரம் அறியாமல் கருத்து சொல்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என கூறினார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *