இந்தியாவுக்கு நாங்கள் ஆதரவு தருகிறோம் – பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான்..
பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பிய நாடுகளுக்கு மூன்று நாள் அரசு முறை பயணம் சென்றிருந்த நிலையில் ஜெர்மனி, டென்மார்க் பயணத்தை முடித்துக் கொண்டு பிரான்ஸ் நாட்டிற்கு சென்று அதிபர் இம்மானுவல் மேக்ரான் அவர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவுகள் மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் குறித்து இருவரும் ஆலோசித்தனர்.
இந்த ஆலோசனையின் முடிவில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக சேர பிரான்ஸ் அரசு இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிப்போம் என இம்மானுவல் மேக்ரான் உறுதி அளித்துள்ளார். அது மட்டுமின்றி அணுசக்தி மூலப் பொருட்கள் விநியோகிக்கும் நாடுகள் குழுவில் இந்தியா நுழையவும் ஆதரவு தருகிறோம் என தெரிவித்தார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தற்போது ரஷ்யா, இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா போன்ற இந்து நாடுகள் மட்டுமே நிரந்தர உறுப்பினர்களாக செயல்படுகிறது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் இந்தியா உள்ளிட்ட நிரந்தரமற்ற உறுப்பினர்களாக உள்ள 10 நாடுகள் ஐ.நா. பொது சபையில் நிரந்தரமாக சேர வாய்ப்புள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக சேர்வதற்கு இந்தியாவும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது இதற்கு நாங்கள் ஆதரவு தருகிறோம் என பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. அணுசக்தி தொடர்பான வர்த்தகத்தில் ஈடுபட இந்தியா விரும்புகிறது என்பதையும் பிரதமர் நரேந்திர மோடி இம்மானுவல் மேக்ரானிடம் தெரிவித்தார். இதை தொடர்ந்து இந்தியா – பிரான்ஸ் இடையிலான பாதுகாப்பு குறித்து இருவரும் ஆலோசித்தனர்.