அமித்ஷாவின் பேச்சுக்கு..!! கருத்து தெரிவித்த மம்தா பானர்ஜி

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதில் அளித்துள்ளார். சிஏஏ அமல்படுத்தவில்லை என்றால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை என்று  தெரிவித்துள்ளார். மம்தா பானர்ஜி மேலும் பேசுகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது பாஜகவின் கூட்டாளி காட்சியாக செயல்படுகிறது.

அவர்கள் இந்துக்களையும், முஸ்லிம்களையும் பிரிக்க வேண்டும் என தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.  இதற்கு அமித்ஷா சில  முக்கிய அதிகாரத்தில் உள்ளவர்களையும் பயன்படுத்தி வருகிறார் என குற்றம் சாட்டினார்.மேலும்  அவர் எல்லைப் பாதுகாப்புப் படையை தேவையில்லாமல் பயன்படுத்துவதாகவும், பி எஸ் எஃப் அமித்ஷாவின் வலையில் விழக்கூடாது என்று  மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில் குடியுரிமை திருத்த சட்ட மசோதா முடிந்து போன விஷயம் என குறிப்பிட்டார். இல்லையென்றால் அவர்கள் ஏன் இந்த மசோதாவை பாராளுமன்றத்தில் கொண்டு வரவில்லை, குடிமக்களின் உரிமைகள் தடுக்கப்படுவதை நான் விரும்பவில்லை என்றார். நாம் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

அமித்ஷா நான் என்ன செய்ய வேண்டும் என எனக்குக் கற்றுக் கொடுக்க வேண்டாம். நேபாளம், பூடான் மற்றும் வங்காளதேசத்தின் எல்லைகளைக் காப்பதுதான் உங்களின் வேலை என்று பானர்ஜி கூறினார். இது போன்ற செயல்களில் இனிமேல் ஈடுபடாமல்  இந்தியாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பாடுபட வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *