#Breaking பொதுத்தேர்வின் போது தடையற்ற மின்சாரம்… மின்வாரியத்திடமிருந்து பறந்த அதிரடி உத்தரவு!

பொதுத்தேர்வின் போது தடையற்ற மின்சாரம் வழங்க மின்வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

பத்தாம் வகுப்பு மற்றும் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறும் பொதுத்தேர்வின் போது தேர்வு மையங்களில் மின் தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கும் மின்சார வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில்வரும் 5 ஆம் தேதி முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் மின்சார வாரியம் நடவடிக்கை மின் தடை ஏற்படும் பட்சத்தில் உடனடியாக மாற்று வசதி ஏற்படுத்தவும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு மையங்களில் மின்வாரிய அதிகாரிகள் முன்கூட்டியே மின்பாதைகள் குறித்து ஆய்வு செய்திருக்க வேண்டும் என்றும், பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகத்தை நிறுத்த ஏற்கனவே திட்டமிட்டிருந்தாலும் கூட பொதுத்தேர்வின் போது மின் தடை ஏற்படக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு மையங்களுக்கு அருகில் இருக்கும் மின்மாற்றிகளை ஆய்வு செய்து, அவை பழுதடைந்திருந்தால் உடனடியாக மாற்றவும் மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *