மாணவர்களே உஷார் !! காப்பி அடித்தால் ஓராண்டுக்கு தேர்வெழுத முடியாது..
நாளை மறுநாள் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்க இருப்பதால் தேர்வு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடுகள் போன்ற பல அறிவிப்புகளை பள்ளி தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
அதன் படி, பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12 மாணவர்கள் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் என தெரிவித்துள்ளது. அதோடு தேர்வு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் பறக்கும்படை அதிகாரிகளும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என தெரிவித்துள்ளது.
இதனியையே பொதுத்தேர்வு மையங்களில் ஆசிரியர்கள், மாணவர்கள் செல்போன் எடுத்துவரக்கூடாது என்றும் மீறினால் கடிமையான நடவடிகை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. விடைத்தாள் மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுத்தேர்வில் காபி அடித்தால் மாணவரின் தேர்வை ரத்து செய்வதோடு மட்டுமில்லாமல் ஓராண்டு தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என்றும் ஆள்மாறாட்டத்தில் ஈடுப்பட்டால் பொதுத்தேர்வு எழுத நிரந்தர தடை விதிக்கப்படும் என்று கூறியுள்ளது.
மேலும் பள்ளி நிர்வாகங்கள் ஓழுங்கீன செயல் மற்றும் அதற்கு உடந்தையாக இருப்பது தெரியவந்தால் பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும் பள்ளி தேர்வுகள் இயக்ககம் கூறியுள்ளது.