நாட்டின் மின்பற்றாக்குறைக்கு காரணம் பிரதமர் நரேந்திர மோடி.. ராகுல் காந்தி விமர்சனம்..!!
பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் சுற்றுப் பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
ராகுல் காந்தி பதிவிட்டுள்ள இந்த ட்வீட்டில் மின்பற்றாக்குறை, வேலையின்மை, விவசாயிகளின் பிரச்சனைகள் மற்றும் பணவீக்கம் குறித்து ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். ராகுல் காந்தியின் இந்த விமர்சனம் பெரும் விவாத பொருளாக மாறிய நிலையில் மேலும் அவர் பிரதமர் நரேந்திர மோடியின் எட்டு ஆண்டுகால ஆட்சி தவறான ஆட்சி என்றும் விமர்சித்துள்ளார்.
வேகமாக வளர்ந்து வந்த பொருளாதாரம் இவரின் ஆட்சிக்கு பின்னால் சரிவை சந்தித்து வருகிறது என்று கருத்து தெரிவித்துள்ளார். ஏற்கனவே நாட்டில் நடந்து வரும் மின் நெருக்கடி குறித்து மோடியை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார் என்பது குறிப்பித்தக்கது. இதற்கு யாரைக் குற்றம் சாட்டுவீர்கள் என்றும் ராகுல் காந்தி ட்விட்டரில் பிரதமருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் நிலக்கரி விநியோக பற்றாக்குறை, அது தவிர மின்தேவை அதிகரித்து வரும் சூழ்நிலையில் மின் உற்பத்தி ஆலைகளை பராமரிப்புக்காக மூடப்பட்டதன் விளைவாகும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். மேலும் பிரதமரின் கடந்த கால உரைகளைக் சுட்டி காட்டி அதில் அவர் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார் எடுத்து காட்டினார்.
இதனால் நாட்டின் மின்பற்றாக்குறை, வேலையின்மை, விவசாயிகளின் பிரச்சனைகள் அதிகரித்துள்ளது என மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.