ஒலிப்பெருக்கிகள் வேண்டாம்..!! உத்தரப்பிரதேச அரசு அறிவிப்பு..!!!

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக மதம் சார்ந்த பிரச்சனைகள் மீண்டும் தலைதூக்க தொடங்கி விட்டனர். இதற்கு பல தலைவர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் பிரதமர் மோடி அவர்களுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வழிபாட்டுத் தலங்களில் உள்ள ஒலிபெருக்கிகளை அகற்றவும் சில ஒலிப்பெருக்கியின் ஒலி அளவைக் குறைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.  

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வசிக்கும் பொதுமக்களின் நலன் கருதி இந்த உத்தரவை பிறப்பிப்பதாக முதல்வர் யோகி ஆதித்யநாத்  தெரிவித்திருந்தார். அதேபோல்  முன் அனுமதியின்றி எந்த ஒரு மத ஊர்வலம் மற்றும் பொது நிகழ்ச்சியும்  நடத்த கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தார்.முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவின் பேரில் மசூதிகள், கோயில்கள் மற்றும் பிற வழிபாட்டு தளங்களில் இருந்த 54,000 ஒலிபெருக்கிகளை  அகற்றப்பட்டு உள்ளதாக உத்தரப்பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது. 

மேலும்  60,200 ஒலிபெருக்கிகளில்  எந்த அளவு ஒலி அளவில் இயக்க வேண்டும் என்பதை உத்தரப்பிரதேச மாநில அரசு  நிர்ணயித்து கொடுத்துள்ளது. குறிப்பாக  பெரேலி பகுதியில் உள்ள  16,682 ஒலிப்பெருக்கிகள் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது.  இதன் மூலம் மக்கள் பெருமளவு இடையூறுகள் தவிர்க்கப்படும் என்று உத்தரப்பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது.

ராம்  நவமி ஊர்வலத்தை ஒட்டி ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் நடந்த நிலையில், மத ஊர்வலங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் உள்ள ஒலிபெருக்கிகளை அகற்ற முதல்வர் யோகி ஆதித்யநாத் கட்டுப்பாட்டை பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *