பிரசாந்த் கிஷோர் தொடங்கப்போகும் புதிய கட்சி..!! அரசியலில் மேலும் ஒரு பரபரப்பு..!!

பல கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் தற்போது புதிய கட்சி ஒன்றை தொடங்கப்போவதாக  ட்விட்டரில் மறைமுகமாக ட்வீட் செய்துள்ளார்.

தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலில் பணியாற்றி வெற்றி கண்ட பிரசாந்த் கிஷோர் கடந்த ஆண்டு  காங்கிரஸ் கட்சியில்  இணைய போவதாக தகவல்கள் வெளியாகின.  இந்த சர்ச்சையை மறுத்த பிரசாந்த் கிஷோர் திடீர் திருப்பமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் கே.சி.வேணுகோபால் ஆகியோரை சந்தித்து பேசினார். 

இந்த சந்திப்பில் காங்கிரஸை பலப்படுத்துவது தொடர்பாகவும் வரும் நாடாளுமன்றத்தில் எப்படி செயல்படுவது குறித்து அறிக்கை காங்கிரஸ் தலைவருக்கு அளித்தார். பிரசாந்த் கிஷோரின் பரிந்துரைகளை விவாதிப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அம்பிகா சோனி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் அடங்கிய குழு ஒன்றையும் சோனியா காந்தி அமைத்தார். 

இந்நிலையில் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் தெலங்கானா ராஷ்ட்ரிய சமதி கட்சிக்கு தேர்தல் பணியாற்றுவதை அறிந்த காங்கிரஸ் தலைமை காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோர் இணைவதை நிராகரித்து விட்டது. பிரசாந்த் கிஷோர்  காங்கிரஸில் சேரும் திட்டம் தோல்வி அடைந்த நிலையில் பீகாரை மையமாக கொண்டு புதிய கட்சி ஒன்றை தொடங்கப்போவதாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். 

அதில் அவர் ஜனநாயகத்தில் அர்த்தமுள்ள பங்கேற்பாளராகவும், மக்களுக்கு சாதகமான கொள்கையை வடிவமைக்க போவதாகவும் தெரிவித்துள்ளார். இது என்னுடைய 10 வருட ரோலர் கோஸ்டர் சவாரி க்கு வழிவகுத்து உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *