இன்று அரசு முறை பயணம் மேற்கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி..
அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஐரோப்பிய சுற்றுப்பயணம் சென்றுள்ளார். இன்று(2/5/22) முதல் மே 4 ஆம் தேதி வரையிலான இந்த பயணத்தில் டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள போகிறார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முதல் பயணமான இன்று ஜெர்மனியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்ற பின் ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பணத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மற்றும் பொருளாதார விஷயங்கள் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் பின் இந்தியா-ஜெர்மனி இடையேயான அரசாங்க ஆலோசனைகளின் 6-வது பதிப்பிற்கு இணைத் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற போகிறார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதை தொடர்ந்து டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி கோபன்ஹேகனுக்கு புறப்படுகிறார். இந்த பயணத்தின் போது அந்நாட்டில் உள்ள தொழில் அதிபர்களை சந்தித்த பிறகு டென்மார்க்கில் உள்ள இந்திய தொழில் அதிபர்களை சந்தித்து பேச போகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கு அடுத்து டென்மார்க் நடத்தும் 2வது இந்தியா-நார்டிக் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இறுதியாக,மே 4ஆம் தேதி பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோனை மோடி சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட இமானுவேல் மாக்ரோன் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.