பாரளுமன்ற தேர்தலுக்கு புது வியூகம் வகுக்கும் பாரதிய ஜனதா கட்சி..!!!
கடந்த சில நாட்களாக டெல்லி பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் வரும் 2024 ல் லோக்சபா தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து முக்கிய ஆலோசனைகள் நடந்து வருகின்றன. இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவர் நட்டா, கட்சி செயலாளர் சந்தோஷ், மூத்த தலைவர் முரளிதர ராவ் என பலர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்த ஆலோசனையில் முக்கியமாக இடம் பெறுவது பூத் கமிட்டி சிறப்பாக எவ்வாறு செயல்படுத்துவது என்று தலைவர்கள் தீவிரமாக விவாதித்துள்ளனர் என கூறப்படுகிறது. அதை தொடர்ந்து கீழ்மட்ட அளவில் வாக்காளர்களை கண்டறிந்து அவர்களை பா.ஜ.வுக்கு ஓட்டு சேகரிக்கும் பணியை மேற்கொள்ளப் போவதாக தெரிவித்தனர்.
உயர்மட்ட தலைவர்கள் பலர் அடங்கிய இந்த குழு பற்றிய விவரங்கள் ஓரிரு வாரங்களில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு மாநிலங்களின் எம்.பி.க்கள் எம்.எல்.ஏ.க்கள் மாநில மற்றும் மாவட்ட தலைவர்கள் பங்கேற்கும் இந்த பிரசாரம் மூன்று மாதங்களுக்கு தொடர்ச்சியாக நடக்க போவதாகவும் இறுதியில் முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்துடன் இந்த பிரச்சாரம் முடிவடையும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பயணத்தின் மூலம் பெருவாரியான பொதுமக்களுடன் கலந்து பேசி அவர்களிடம் பா.ஜ. ஆட்சியின் சிறப்புகளை கூறி ஒட்டுக் கேட்பது தான். இதை தொடர்ந்து ஒவ்வொன்றுக்கும் ஏற்ப வியூகங்களை வகுப்பது தொடர்பான ஆலோசனைகளை மேற்கொள்ள கட்சியின் முக்கிய தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.