இது தமிழ்நாடு டா… ஹிஜாபை கழட்ட சொன்ன பாஜக முகவருக்கு நேர்ந்த பரிதாபம்!

Hijab

மதுரை மேலூரில் ஹிஜாபை அகற்றிவிட்டு வாக்கு செலுத்தும்படி இஸ்லாமிய பெண்களிடம் பாஜக முகவர் தகராறு செய்துள்ளார்.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது காலை 7 மணி முதலே மக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாபை கழட்டிவிட்டு வாக்களிக்கும்படி பாஜக முகவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலூரில் அல் அமீன் உருது தமிழ் உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் ஏராளமான இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து வந்து, வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கிருந்த பாஜக முகவரான கிரிராஜன் என்பவர், அனைத்து இஸ்லாமிய பெண்களும் ஹிஜாப்பை கழட்டிவிட்டு, வாக்களிக்க செல்ல வேண்டும் என்றும், அப்போது தான் வாக்காளர் பட்டியலில் இருக்கும் புகைப்படத்துடன் ஒப்பிட்டு பார்க்க முடியும் என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அங்கிருந்த தேர்தல் அதிகாரிகள் வாக்காளர் பட்டியலை நாங்கள் பரிசோதித்தால் மட்டும் போதும், ஹிஜாபை கழட்ட வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்தனர். ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத கிரிராஜன் அதிகாரிகள் மற்றும் பிற கட்சி முகவர்களுடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து போலீசார் அவரை வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றினர்.

Leave a Reply

Your email address will not be published.

“அவங்களுக்கு அரசியல், மானம், நேர்மை இதெல்லாம் கிடையாது”… உடன்பிறப்புகளை உஷார்படுத்திய ஸ்டாலின்!

நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் திமுகவினர் பொறுபுடன் நக்குமாறு முதலமைச்சர்…

#Breaking சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சித்தி உட்பட 8 பேருக்கு ஆயுள்; 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள்…