நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; அதிகம், குறைந்தபட்ச வாக்குப்பதிவு எங்கு தெரியுமா?

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. சுமார் 1.13 லட்சம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

காலை 7 மணிக்கு தொடங்கிய பொது வாக்காளர்களுக்கான வாக்குப்பதிவு நேரம் 5 மணியுடன் நிறைவு பெற்றது. அதன் பின்னர் 6 மணி வரை கொரோனா நோயாளிகள் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது. 5 மணிக்கு முன்பாகவே வந்து காத்துக்கொண்டிருந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது.

பிற்பகல் 1 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் சராசரியாக 35.34 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்ததாக அறிவிக்கப்பட்டது. 3 மணி நிலவரப்படி 47.18 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. மாநகராட்சிகளில் – 39.13%, நகராட்சிகளில் – 53.49%, பேரூராட்சிகளில் – 61.38% வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது.

சென்னையைப் பொறுத்தவரை காலை 9 மணி நிலவரப்படி 3.96 சதவீதமும், 11 மணி நிலவரப்படி 17.88 சதவீதமும், 1 மணி நிலவரப்படி 23.42 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. 3 மணி நிலவரப்படி 31.89 சதவீத வாக்குகளும், 5 மணி நிலவரப்படி 41.68 சதவீத வாக்குகளும் பதிவாகின.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் 60.70% வாக்குகள் பதிவாகி இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னையில் குறைந்தபட்சமாக 43.59% வாக்குகளும், அதிகபட்சமாக தருமபுரியில் 80.49 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. நாமக்கல்லில் 76.86 சதவீத வாக்குகளும், கரூரில் 76.34 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…

மூன்று நாட்களாக கட்டணமில்லாமல் கடந்து செல்லும் வாகனங்கள், டோல்கேட் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் 

பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் மூன்று நாட்களாக அனைத்து ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு…