தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு… முக்கியமான 10 அறிவிப்புகள் என்ன?

Lockdown

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் பரவல் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு ஊரடங்கை மார்ச் 2ம் தேதி வரை நீட்டித்துள்ள தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது.

தமிழக அரசு மேற்கொண்ட கடுமையான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் ஜனவரி 22ம் தேதி 30,744 ஆக இருந்த நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, நேற்றைய நிலவரப்படி 3 ஆயிரத்து 86 ஆக குறைந்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதற்கெல்லாம் தடை தொடரும்:

  1. தமிழ்நாட்டில் தொடர்ந்து தொற்றுப் பரவலை கட்டுக்குள் வைத்திடவும், குறைத்திடவும் பின்வரும் கட்டுப்பாடுகள் மட்டும் 16-2-2022 முதல் 2-3-2022 வரை நடைமுறைப்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
  2. சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கும் உள்ள தடை தொடரும்.
  3. திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 200 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும்.
  4. இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 100 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும்.

எதற்கெல்லாம் அனுமதி:

  1. நர்சரி பள்ளிகள் (LKG, UKG) மற்றும் மழைலையர் விளையாட்டுப் பள்ளிகள் (Play Schools) திறக்க அனுமதியளிக்கப்படுகிறது.
  2. பொருட்காட்சிகள் நடத்த அனுமதியளிக்கப்படுகிறது.
  3. வணிக நிறுவனங்கள், மால்களில் 100 சதவீத வாடிக்கையாளர்களுக்கு அனுமதி
  4. வரும் 16ம் தேதி முதல் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  5. அனைத்து கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் (Hand Sanitizer with Dispenser) கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் (Thermal Screening).
  6. கடைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

“அவங்களுக்கு அரசியல், மானம், நேர்மை இதெல்லாம் கிடையாது”… உடன்பிறப்புகளை உஷார்படுத்திய ஸ்டாலின்!

நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் திமுகவினர் பொறுபுடன் நக்குமாறு முதலமைச்சர்…

#Breaking சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சித்தி உட்பட 8 பேருக்கு ஆயுள்; 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள்…