மாணவர்கள் கவனத்திற்கு… இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

தொடர் கனமழை காரணமாக மயிலாடுதுறை, திருவாரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் வளைகுடா பகுதியில் நிலவி வரும் வளி மண்டல மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக நேற்று தென் தமிழக மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் நேற்றே உத்தரவு பிறப்பித்தார். அதே நேரத்தில் திருப்புதல் தேர்வு இருக்கும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என உத்தரவிட்டப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்திலும் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இன்று 2ஆவது நாளாக மழை தொடரும் என்பதால் நாகை மாவட்டத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறையிலும் கனமழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…