#BREAKING கூடுதல் தளர்வுகள் என்னென்ன?… முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

MK Stalin

தமிழ்நாட்டில் படிப்படியாக கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு விதிக்கப்பட்டுள்ள சில கட்டுப்பாடுகள் வரும் பிப்ரவரி 15ம் தேதியுடன் நிறைவடைகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கணிசமாக குறைந்து வரும் நிலையில், கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க 100 பேருக்கு மட்டுமே அனுமதி, திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும், LKG, UKG போன்ற மழலையர் பள்ளிகள், அங்கன்வாடிகளை திறக்க தடை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன.

இந்நிலையில் நேற்று தனியார் பள்ளிகளின் சங்கம் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், மழலையர் பள்ளிகளை திறக்க அனுமதிக்கும் படி கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் மழலையர் பள்ளிகள் திறப்பு, பொருட்காட்சிகளை அனுமதிப்பது, திருமணத்தில் பெரும்பாலனோர் பங்கேற்க அனுமதி, தியேட்டர்கள் மற்றும் உணவகங்களில் 100 சதவீதம் பேர் அமர்ந்து சாப்பிட அனுமதி உல்ளிட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷணன், தலைமைச்செயலாளர் இறையன்பு, பள்ளிக்கல்வித்துறை செயலாளர், டிஜிபி சைலேந்திர பாபு, மருத்துவத்துறை சார்ந்த வல்லுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

“அவங்களுக்கு அரசியல், மானம், நேர்மை இதெல்லாம் கிடையாது”… உடன்பிறப்புகளை உஷார்படுத்திய ஸ்டாலின்!

நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் திமுகவினர் பொறுபுடன் நக்குமாறு முதலமைச்சர்…

#Breaking சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சித்தி உட்பட 8 பேருக்கு ஆயுள்; 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள்…