பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியது ஏன்?… கைதானவர் கொடுத்த வாக்குமூலம்!

BJP

சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று நள்ளிரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், அடுத்தடுத்து 3 பெட்ரோல் குண்டுகளை வீசிச்சென்றது தெரியவந்தது. அப்போது அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனையடுத்து கமலாலயம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் சென்னை நந்தனம் பகுதியைச் சேர்ந்த வினோத் என்கிற கருக்கா வினோத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழகத்தில் நீட் தேர்வு தொடர்பாக பா.ஜ.க.வின் நிலைபாட்டை கருத்தில் கொண்டு ஆத்திரத்தில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் 3 பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசியதாக தெரியவந்துள்ளது.

வினோத் ஏற்கனவே பழைய குற்றவாளி என்பது, பெட்ரோல் குண்டு வீசும் சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதும் தெரியவந்துள்ளது. இவர் மீது ஏற்கனவே 4 கொலை முயற்சி வழக்குகள் உட்பட சுமார் 10 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஏற்கனவே டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை கொளுத்தி வீசியதும், 2017ம் ஆண்டு தேனாம்பேட்டை காவல் நிலைய வாசலில் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை கொளுத்தி வீசியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…