#Breaking தமிழகத்தில் பிப்.19ம் தேதி பொது விடுமுறை… அரசு அதிரடி!

தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல், 2022-க்கான, வாக்குப்பதிவு 19.02.2022 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 1,374 மாநகராட்சி கவுன்சிலர், 3,843 நகராட்சி கவுன்சிலர், 7,621 பேரூராட்சி கவுன்சிலர்கள் என மொத்தம் 12,838 பதவி இடங்களுக்கு இந்த தேர்தல் நடக்கிறது. மேற்படி தேர்தல் நடைபெறவுள்ள அனைத்து நகர்புற உள்ளாட்சி பகுதிகளுக்கு பிப்ரவரி அன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு சேகரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு நாளன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள கடம்பூர் பேரூராட்சிக்கு பொது விடுமுறை பொருந்தாது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…

மூன்று நாட்களாக கட்டணமில்லாமல் கடந்து செல்லும் வாகனங்கள், டோல்கேட் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் 

பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் மூன்று நாட்களாக அனைத்து ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு…