அதிர்ச்சியில் அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள்; வெளியானது எச்சரிக்கை!

driver, conductor

அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மாணவர்கள் படியில் தொங்கிக்கொண்டு பயணம் செய்வது, பெண் பயணிகளுக்கு இலவச பயணச்சீட்டு வழங்குவது, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பயணிகளிடம் கனிவுடன் நடந்து கொள்வது என போக்குவரத்து துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நாகை மாவட்ட போக்குவரத்து கழகம் விதித்துள்ள தடை, அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பேருந்து ஓட்டுநர்கள் பயண நேரத்தில் செல்போன் பேசுவதாலும், நடத்துநர்கள் முன் இருக்கையில் அமர்ந்து செல்போன் பேசுவதால் ஏற்படும் கவனச்சிதறலாலும் அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

எனவே பணி நேரத்தில் அரசு பேருந்து ஓட்டுநர்கள் சட்டையின் முன்பாக்கெட்டில் செல்போன் வைத்திருக்க கூடாது என்றும், அதனை நடத்துநரிடம் ஒப்படைத்துவிட்டு பணி முடிந்ததும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் நாகை போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் பகல் நேரங்களில் அரசு பேருந்து நடத்துநர்கள் முன் இருக்கையில் அமரக்கூடாது என்றும், கடைசி இருக்கையில் அமர்ந்து இரண்டு படிக்கட்டுகளையும் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பணி நேரத்தில் ஓட்டுநர்கள் செல்போன் வைத்திருப்பது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…