உச்சகட்ட பரபரப்பு ; டிஜிபி உடன் முதல்வர் தீடீர் ஆலோசனை!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சட்டம் ஒழுங்கு குறித்து தலைமைச் செயலாளர், டிஜிபி உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழ்நாட்டில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் 649 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சட்டம் ஒழுங்கு நிலவரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த கூட்டத்தில் டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன், உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவசகாயம், உள்துறை செயலாளர் பிரபாகர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல்துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், பெண்கள் மற்றும் வீட்டில் தனியாக வசித்து வரும் முதியோர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், காவல்துறையை நவீனமாயமாக்குதல் போன்ற குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன.

மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால், அப்போது சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காக்க என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள நன்னடத்தை விதிமுறைகள் எவ்வாறு பின்பற்றப்படுகிறது என்பது போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…