நீட்  விலக்கு விவகாரம் – அனைத்து கட்சி கூட்டங்களுக்கு அழைப்பு விடுத்த முதலமைச்சர்

தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான சட்ட முன்வடிவு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் தேதியன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்காக தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இந்த சட்ட முன்வடிவை தமிழக ஆளுநர் ஆர் என்றது ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்காத நிலையில் இதனை உடனடியாக அனுப்ப வேண்டும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

       இருப்பினும் இந்த சட்ட முன்வடிவு ஒன்றிய அரசுக்கு அனுப்பப்படாத நிலையில், அந்த சட்ட முன்வடிவை தமிழ்நாடு சட்டமன்றம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று சட்டமன்ற பேரவை தலைவர் அவர்களுக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளார்.இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரியும் இது தொடர்பாக மாநில அரசு அமைத்திருந்த உயர்மட்ட ஆய்வுக் குழுவின் அறிக்கையை ஆளுநர் விரிவாக ஆராய்ந்தார்.இந்த மசோதா ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் நலனுக்கு எதிராகவே உள்ளது.எனவே, இந்த மசோதாவை ஆளுநர் தமிழ்நாடு அரசுக்கே திரும்பி அனுப்பியுள்ளார்.மேலும் நீட் ரத்து மசோதாவை சட்டப்பேரவையில் மறுஆய்வு செய்ய வேண்டும்.” என்று கூறியது.

 இந்நிலையில் ஆளுநர் தெரிவித்த இக்கருத்துக்களை ஆராய்ந்து நீட் தேர்வு பற்றிய உண்மை நிலையை தெளிவாக விளக்குவதோடு, இந்த சட்ட முன்வடிவு மீண்டும் சட்ட மன்றத்தில்  நிறைவேற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள  சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்களுக்கும் வரும் பிப்- 5ஆம் தேதி அழைப்பு விடுத்துள்ளார் முதலமைச்சர் . 

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…