இந்த அமைப்புகளுக்கு தடை விதிப்பு… ஒன்றிய அரசு அதிரடி!

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்த ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த பதிலில் நாட்டில் உள்ள 42 பயங்கரவாத அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு)ச் சட்டம், 1967, முதல் அட்டவணையில், நாட்டில் உள்ள 42 பயங்கரவாத அமைப்புகள் சேர்க்கப்பட்டிருப்பதுடன், இவற்றில் 13 அமைப்புகள் சட்டவிரோத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தச் சட்டத்தின் நான்காவது அட்டவணையின்படி, இதுவரை, 31 தனிநபர்கள், தீவிரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மத்திய- மாநில அரசுகளின் சட்ட அமலாக்க அமைப்புகள், இதுபோன்ற அமைப்புகள் / தனிநபர்களின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணித்து, சட்டத்தின்படி அவற்றின்மீது உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றன.

தடை செய்யப்பட்ட அமைப்புகளின் தலைவர்கள்/உறுப்பினர்கள், வேறு பெயர்களில் மீண்டும் ஒன்று சேருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும் விதமாக, தனிநபர்களை தீவிரவாதிகளாக அறிவிப்பதற்கான சட்டப்பிரிவு, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு)ச் சட்டம், 2019-ல் சேர்க்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்த ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

“அவங்களுக்கு அரசியல், மானம், நேர்மை இதெல்லாம் கிடையாது”… உடன்பிறப்புகளை உஷார்படுத்திய ஸ்டாலின்!

நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் திமுகவினர் பொறுபுடன் நக்குமாறு முதலமைச்சர்…

#Breaking சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சித்தி உட்பட 8 பேருக்கு ஆயுள்; 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள்…