ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு! – முதலமைச்சரின் திடீர் அறிவிப்பு

உலகம் முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இந்த முறை உலகம் ஒரே நேரத்தில் இரண்டு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. முன்பு கொரோனாவை மட்டும் எதிர்கொண்ட உலக நாடுகள் தற்போது ஓமைக்ரான் பரவலையும் சந்தித்து வருகின்றது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. அங்கு தினசரி பாதிப்பு எண்ணிக்கை 40,000-க்கும் மேல் கடந்துள்ளது.

இந்நிலையில் நேற்று திருவனந்தபுரத்தில், கொரோனா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், துபாயில் உள்ள முதல்வர் பினராயி விஜயன் ஆன்லைன் மூலமாக கலந்து கொண்டார்.

கூட்டத்திற்கு பின்னர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; “கேரளாவில் வரும் 6-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இதன்போது, கடந்த ஞாயிற்றுக்கிழமை போல் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டால் அந்த மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது, தனியார் மருத்துவமனைகளுக்கும் பொருந்தும்.

மாநிலத்தில் நேற்று 42 ஆயிரத்து 152 பேருக்கு கொரோனா.தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த 81 நோயாளிகள் மரணம் அடைந்த நிலையில் பலியானோர் எண்ணிக்கை 54 ஆயிரத்து 395 ஆக உயர்ந்து உள்ளது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

“அவங்களுக்கு அரசியல், மானம், நேர்மை இதெல்லாம் கிடையாது”… உடன்பிறப்புகளை உஷார்படுத்திய ஸ்டாலின்!

நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் திமுகவினர் பொறுபுடன் நக்குமாறு முதலமைச்சர்…

#Breaking சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சித்தி உட்பட 8 பேருக்கு ஆயுள்; 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள்…