நான் என்ன திமுக அமைச்சரா ? என்கிட்ட இருப்பது ஆடு மட்டும் தான் : ரூ.500 கோடி நஷ்ட ஈடு வழக்குக்கு அண்ணாமலை பதில்

அண்ணாமலை மீது பி.ஜி.ஆர் நிறுவனம் அவதூறு வழக்கு தொடுத்து ரூ.500 கோடி நஷ்ட ஈடு கேட்டுள்ள நிலையில், தன்னிடம் சில ஆடுகள் மட்டுமே இருப்பதாகவும் திமுக அமைச்சர்களை போல் ஊழல் செய்து கொடுப்பதற்கு எதுவுமிலை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின்வாரியத்தில் முறைகேடு நடைபெறுவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், பி.ஜி.ஆர் எனர்ஜி நிறுவனம் மீதும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.ட்விட்டர் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து சில வாரங்களாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை – மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இடையே வார்த்தை போர் நிலவிவருகிறது .

மோதல் தொடங்கியது எங்கே :

தமிழ்நாடு மின்வாரியத்திற்கு ஒரு யூனிட் இருபது ரூபாய் என்ற அளவுக்கு மின்சாரம் வாங்கப்படுவதாகவும் அதில் ஊழல்நடப்பதாகவும் குற்றம்சாட்டினார், அண்ணாமலை . இதற்குப் பதிலளித்து செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அப்படி ஊழல் நடந்திருந்தால் அதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டுமென்றும் இல்லாவிட்டால் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்றும் கூறியிருந்தார்.

இதன்பின் , தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் ஒப்பந்ததாரர்களுக்கு கடந்த சில மாதங்களாக பணம் ஏதும் விடுவிக்கப்படவில்லை. திடீரென கடந்த சில நாட்களில் 29.64 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டிருக்கிறது. பில் தொகையில் நான்கு சதவீத கமிஷன் எடுத்துக்கொள்ளப்பட்டு, இந்த தொகை விடுவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு பதில் சொல்லவும் என குறிப்பிட்டு எக்ஸல் சீட் ஸ்கீரின் ஷாட் ஒன்றினையும் பதிவிட்டு இருந்தார் . இதற்கு பதிலளித்த அமைச்சர் , ஆதாரத்தை கேட்டால் எக்ஸல் சீட் தருகிறார் அண்ணாமலை என தன் பங்குக்கு கலாய்த்தும் பதிலளித்து இருந்தார் . தொடர்ச்சியாக இந்த பிரச்சனை இருவருக்கும் இடையே காரசார மோதலினை ஏற்படுத்தியது .

இதனிடையே தான் கடந்த வாரம் தனது ட்விட்டர் பக்கத்தில் , கோபாலபுரம் – பிஜிஆர் எனர்ஜி – மின்சார அமைச்சகம் – செந்தில்பாலாஜி இந்தப்புள்ளிகளை இணைத்துப் பாருங்கள் எளிதில் விடை புரியும் என்று அண்ணாமலை அண்மையில் ட்வீட் செய்திருந்தார்.மின்வாரியத்தில் தனியாருடன் போடப்படும் ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழல் நடக்கவிருக்கிறது என குறிப்பிட்டு இருந்தார் .

இதுதொடர்பாக அண்ணாமலைக்கு அனுப்பப்பட்ட வக்கீல் நோட்டீஸில், ‘பி.ஜி.ஆர் நிறுவன இயக்குநர் ரமேஷ் குமார் குறித்து ட்விட்டரில் அவதூறாக பதிவிட்டு அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதால் 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக வழங்கவேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை ட்விட்டரில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, ‘சார், 500 கோடி ரூபாய்க்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றீர்கள். நான் ஒரு சாதாரண விவசாயி. என்னிடம் இருப்பது சில ஆடுகள் மட்டும்தான். தி.மு.க அமைச்சர்களைப் போல ஊழல் செய்து கொடுப்பதற்கு எதுவுமில்லை. நம்முடைய நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இருக்கிறது. சந்திப்போம்’ என்று பதிலளித்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பட்டயலினத்தவர்கள் கோயிலுக்குள் அனுமதி மறுப்பு… அனைத்து கட்சி போராட்டம் விரைவில்…

விழுப்புரம் அடுத்த மேல்பாதி கிராமத்தில் பட்டயலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்காத் விவகாரத்தில் மாநில…

பட்டாசு குடோன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம் நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு

சேலம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்தவர்களின்…