அதிமுக முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திமுக ஆட்சி அமைந்த பிறகு, ஊழல் புகாரில் சிக்கிய முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 22ம் தேதி அன்று, கரூர் மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கரின் கரூர், சென்னை வீடுகள் உள்ளிட்ட 26 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். எம்.ஆர்.விஜயபாஸ்கர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, குறிப்பிட்ட 8 நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே ஜி.பி.எஸ் கருவி வாங்க வேண்டும் எனப் போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிலும், சில குறிப்பிட்ட நிறுவனங்களிடம் மட்டும் ஒளிரும் பட்டைகளையும் வாங்க போக்குவரத்துறையினருக்குப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கும் எதிராக சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பதிவு செய்த வழக்கில், விசாரணைக்கு ஆஜராகும் படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதனடிப்படையில் சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10.55 மணி அளவில் வழக்கறிஞர்களுடன் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜரானார்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் எஸ்.பி. தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்த வழக்கில், எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 23 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. அதில் அவரிடம் இருந்து 25 லட்சத்து 56 ஆயிரம் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பட்டாசு குடோன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம் நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு

சேலம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்தவர்களின்…

பள்ளிக் கல்வித் துறையில் கலைஞர் நூற்றாண்டு கொண்டாடுவோம்… அமைச்சர் அன்பில்..!

தமிழ்நாடு முதலமைச்சரின் உலகத்  தரத்திலான பல்வேறு திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில்  நடப்பாண்டு…