கோயில்களை சுற்றி டாஸ்மாக் கடைகள்… அமைச்சர் சேகர் பாபு அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் கோயில்களை சுற்றியிருக்கும் டாஸ்மாக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
கோவில்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து 100 மீட்டருக்கு அப்பால் தான் டாஸ்மாக் கடைகள் அமைக்கப்பட வேண்டும் என்ற அரசின் ஆணையை மதிக்காமல், பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. கோவில்களை சுற்றியுள்ள பகுதிகள் குடிமகன்களின் கூடாரமாக மாறுவதால் பெண் பக்தர்கள் கோவிலுக்கு செல்வதில் மிகுந்த சிரமங்கள் உருவாவதாகவும், கோவிலுக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகளால் பக்தர்கள் பாதிக்கப்படுவதாகவும் இந்து அமைப்புகள் பலவும் தொடர்ந்து குற்றச்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர் பாபு பேசியதாவது: தமிழகத்தில் கோயில்களை சுற்றி இருக்கக் கூடிய டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா தொற்று முழுமையாக முடிந்தவுடன் பக்தி சுற்றுலாவுக்கு பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.