100 ஆண்டுகள் ஆனாலும் தேமுதிகவை அழிக்க முடியாது… விஜயகாந்த் ஆவேசம்!

தேமுதிகவுக்கு எதிர்காலம் இல்லை என யார் நினைத்தாலும் அது தவறான எண்ணம் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்: 100 ஆண்டுகள் ஆனாலும் தேமுதிகவை யாராலும் அழிக்க முடியாது. நமது கழகம் என்றென்றும் தமிழகத்தில் வேரூன்றி இருக்கும். கழகத்தின் மீது அவதூறு பரப்புபவர்களின் வார்த்தைகளை தொண்டர்கள் யாரும் நம்ப வேண்டாம்.நமது கழகம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்வதற்கு தொண்டர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

மேலும் ஆசை வார்த்தைகளை நம்பி தேமுதிகவை விட்டுச் செல்வது கட்சிக்கு செய்யும் துரோகம் என்றும், அப்படி கட்சியை விட்டுச் செல்பவர்கள் இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதை உணரும் நாள் விரைவில் வரும் என்றும் தெரிவித்துள்ளார். எனது உடல் நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது உண்மை தான் எனக்கூறிப்பிட்டுள்ள விஜயகாந்த், தேமுதிகவிற்கு எதிர்காலம் இல்லை என யார் நினைத்தாலும் அது தவறு என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பட்டயலினத்தவர்கள் கோயிலுக்குள் அனுமதி மறுப்பு… அனைத்து கட்சி போராட்டம் விரைவில்…

விழுப்புரம் அடுத்த மேல்பாதி கிராமத்தில் பட்டயலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்காத் விவகாரத்தில் மாநில…

பட்டாசு குடோன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம் நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு

சேலம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்தவர்களின்…