மஹாராஷ்டிராவில் நிலநடுக்கம்!

மஹாராஷ்டிராவில் உள்ள கோல்காப்பூர் என்னும் இடத்தில் சற்றுமுன் சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 4.4 ரிக்டராகப் பதிவாகியுள்ளது. இதனை, தேசிய நிலநடுக்க மையம் தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த நிலநடுக்கமானது சரியாக 5 மணி 7 நிமிடம் 7 நொடி நேரத்தில் நிகழ்ந்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 4.4 என சிறிய அளவில் பதிவானதால் பொதுமக்கள் மற்றும் வீடுகள் போன்றவைகளுக்கு எந்த ஒரு ஆபத்தும் ஏற்படவில்லை. சிறிய அளவில் நில அதிர்வினை மட்டுமே உணர்ந்ததாக கூறப்படுகிறது.