எண்ணெய் நிறுவன தலைவர்களுடன் கலந்துரையாடும் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளி காட்சியின் மூலமாக உலக அளவில் உள்ள எண்ணெய் நிறுவன தலைவர்கள் மற்றும் நிபுணர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.இந்த கலந்துரையாடலில் ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் சவுதி ஆரம்கோ நிறுவனத் தலைவர் அமின் நாசர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வானது தூய எரிசக்தி மற்றும் அதன் அளவான பயன்பாடு என்பது தொடர்பான கருத்தை மையமாகக் கொண்டு நடைபெற்றது. கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இந்த கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில் இந்த கலந்துரையாடல் 6 முறை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இந்த கூட்டத்தில் எரிசக்தி உற்பத்தி, தூய ஆற்றல் மற்றும் எரிபொருள் கச்சா எண்ணெய் தொடர்பான அனைத்து விவகாரங்களும் உலக நாடுகளுடன் ஆலோசிக்கப்பட்டன. மேலும், உயிர் எரிபொருள் உற்பத்தி மற்றும் உணவுக்கழிவுகளில் இருந்து எரிபொருள் உற்பத்தி செய்வது தொடர்பான விவாதங்கள் இடம்பெற்றன.