கோப்பையினை வெல்ல சென்னையுடன் மோதப் போவது யார் ? டெல்லி -கொல்கத்தா அணியில் யாருக்கு அடிக்கும் ஜாக்பாட் …

ஐபிஎல் 2021 தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறும் இரண்டாவது அணி எது என தீர்மானிக்கும் போட்டியில் இன்று டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன . இன்று நடைப்பெறும் போட்டியில் வெற்றி பெறும் அணி அக்டோபர் -15 ல் சென்னை அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் பங்கு பெறும் என்பது குறிப்பிடத்தக்கது .

ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் , ப்ளே-ஆப் சுற்றுக்கு டெல்லி , சென்னை , பெங்களூர் , கொல்கத்தா அணிகள் தகுதிப்பெற்றன . முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் சென்னை அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியினை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நேரடியாக முன்னேறியது . மற்றொரு எலிமினேட்டர் சுற்றில் மோதிய பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சுனில் நரேனின் சுழல் மாயாஜலம் மற்றும் பேட்டிங்கில் ஹாட்ரிக் சிக்சர் அடித்ததன் மூலம் பெங்களூர் அணியின் கோப்பை வெல்லும் கனவை தகர்த்து 2 -வது தகுதி சுற்றுப்போட்டிக்கு முன்னேறியது கொல்கத்தா அணி. முதல் தகுதி போட்டியில் தோல்வியுற்ற டெல்லி அணியுடன் இன்று ஷார்ஜாவில் நடைப்பெற உள்ள போட்டியில் கொல்கத்தா மோதுகிறது .இப்போட்டியில் வெல்லும் அணி சென்னை அணியுடன் இறுதிப்போட்டியில் விளையாடும் .

நேருக்கு நேர் :

டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் இதுவரை நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் டெல்லி அணி 12 முறையும் ,கொல்கத்தா அணி 15 முறையும் வெற்றி பெற்றுள்ளன . நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் சுற்று முடிவில் முதல் இடத்தை பிடித்திருந்தது டெல்லி அணி .கடந்த போட்டியிலும் கூட இறுதி ஓவர் வரை ஆட்டத்தை சென்று தோல்வியடைந்தனர்.இதுவரை டெல்லி அணி ஐபிஎல் கோப்பையினை வென்றதில்லை என்பதால் , இறுதிப்போட்டிக்கு முன்னேறி கோப்பையினை வெல்ல கடுமையாக போராடும் எனலாம் . அதை நேரத்தில் நிறைய ஏற்ற இறக்கங்களை நடப்புத் தொடரில் சந்தித்து இந்த இடத்திற்கு முன்னேறியுள்ளது கொல்கத்தா அணி .

யாருக்கு என்ன பலம் :

டெல்லி அணியின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுவது அந்த அணியின் தொடக்க ஜோடி தான் .அதன் தொடக்க வீரர்களான தவான் மற்றும் ப்ரித்வி நல்ல ஃபார்மில் உள்ளனர் . மற்றபடி மிடில் ஆர்டரில் ஸ்ரேயஸ் , ரிஷப் , ஹெட்மையர் என அனைவரும் இத்தொடரில் தங்களது பங்களிப்பினை வழங்கி போட்டியினில் வெற்றி பெற உதவியுள்ளார்கள் . பந்துவீச்சில் அவேஸ்கான் , ரபாடா , நோர்டியா ஆகியோர் கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது .

கொல்கத்தா அணியினை பொறுத்தவரை பேட்டிங்கில் வெங்கடேஷ் ஐயர் , சுப்மன் கில் நம்பிக்கை அளிக்கின்றனர் .மற்றவர்களின் ஃபார்ம் தொடர்ச்சியாக இல்லாதது அந்த அணியின் பலவீனமாக பார்க்கப்படுகிறது . நடப்பு ஐபிஎல் தொடரில் , மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சு கூட்டணியை வைத்து எதிரணியினை திணற வைத்து வருகிறது கொல்கத்தா அணி .சுனில் நரேன் , வருண் சக்கரவர்த்தி , ஷகிப் ஆகியோரின் கூட்டணி பலப்போட்டிகளில் கொல்கத்தாவின் வெற்றிக்கு கைக்கொடுத்துள்ளது .இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் இப்போட்டி ரசிகர்களின் எதிர்ப்பார்பினை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என எதிர்ப்பார்க்கலாம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பட்டாசு குடோன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம் நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு

சேலம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்தவர்களின்…

பள்ளிக் கல்வித் துறையில் கலைஞர் நூற்றாண்டு கொண்டாடுவோம்… அமைச்சர் அன்பில்..!

தமிழ்நாடு முதலமைச்சரின் உலகத்  தரத்திலான பல்வேறு திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில்  நடப்பாண்டு…